மேகதாதுவில் அணை கட்டும் முடிவை ஒரு போதும் கைவிடமாட்டோம்: கர்நாடகா அரசு!

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் அணை கட்டக்கூடாது என, கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம், தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் மற்றும் மந்திரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்தில் கர்நாடக அரசு சார்பில் கர்நாடக மந்திரி சிவக்குமார் பேசியதாவது:
மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி, திட்டத்தை கர்நாடகா ஒருபோதும் கைவிடாது. நாளை முதல் அணை கட்டுவது குறித்து ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும்.
வனத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நாளை ஆய்வு மேற்கொள்கின்றனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here