இலங்கை வரலாற்றில் இரண்டாவது பெரிய போதைப்பொருள் கடத்தல்: எப்படி சிக்கினார்கள் தெரியுமா?

இலங்கைக்குள் கடத்த முயற்சிக்கப்பட்ட பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருள் நேற்று (5) இரவு பேருவளை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டது. இதில் 231.54 கிலோகிராம் ஹெரோயின் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. இலங்கையின் போதைப்பொருள் முறியடிப்பு வரலாற்றில், இது இரண்டாவது மிகப்பெரிய தொகையாகும்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 2777 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

போதை வர்த்தக குழுக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலே பேருவளை கடற்பரப்பில் 231.54 கிலோகிராம் ​ஹெரோய்னைக் கைப்பற்ற காரணமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் ​போதைபிரிவு ​அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி உருகொடவத்தை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்ட 261 கிரோகிராம் ஹெரோயி​னே இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகை ஹெரோய்ன் ஆகும்.

நேற்று இரவு பேருவளை- பலப்பிட்டிய கடற்பரப்புகளுக்கு இடையே கடற்பரப்பிலிருந்து 3 கடல் மைல் தூரத்தில் 231 கிலோ 54 கிராம் ஹெரோயினை படகு ஒன்றின் மூலம் இலங்கைக்குள் ​கொண்டுவர முயன்ற இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38, 34 வயதுடையவர்களே கைதாகியுள்ளனர்.

இவை 214 பொதிகளாகப் பொதி செய்யப்பட்டு பாகிஸ்தான் என்று பெயரிடப்பட்ட சீனி கொண்டு வரப்படும் உர பை மூலம் 11பைகளில் மூலம் கொண்டு வரப்பட்டிருப்பதால் இந்த ஹெரோய்ன் பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாமென பொலிசார் நம்புகின்றனர்.

கைதான இருவரையும் ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் பொலிஸாரிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 5166 மில்லியன் ரூபா பெறுமதியுடைய- 430 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் தொடர்புடைய 37,304 பேர் நாடு முழுவதும் கைதாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here