மன்னார் மனித புதைகுழியில் இரும்புக் கம்பியால் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடுகள்!

மன்னார் சதொச வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழிவு பணி இன்றும் இடம்பெற்றது. 112வது நாளாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன.

மன்னார் மனிதப்புதைகுழி தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே பலத்த சந்தேகம் நிலவியது. கைது செய்யப்பட்டவர்களே சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் நிலவியது.

இந்த சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக, இன்று கால்கள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள் இரண்டு மீட்கப்பட்டன.

கால்கள் இரண்டும் இரும்புக்கம்பியால் இறுகக்கட்டப்பட்ட நிலையில், இன்று மதியம் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டது.

இரும்புக்கம்பியால் இறுகக் கட்டப்பட்ட எலும்புக்கூட்டின் பகுதி மாத்திரமே மீட்கப்பட்டுள்ளது. இது மனித எச்சங்களாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வாரத்தில் மனித புதைகுழியில் இருந்து பெண் ஒருவரின் மோதிரம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை மன்னார் மனித புதைகுழியில் இருந்து 266 முழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

260 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here