19வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் கைவைக்க தயாராகும் மைத்திரி!

19வது திருத்தச் சட்டத்தில் கைவைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகி வருகிறார். இதற்கான முன்னோட்டமாக இன்று ஜனாதிபதியால் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில்-

“ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவரது தலைமையில் அயராத முயற்சியின் பெறுபேறாகவே மூன்று தசாப்த காலமாக நாட்டில் ஜனநாயகம் தொடர்பில் நிலவிய சிக்கல் நிலைமைக்கு தீர்வாக இலங்கை அரசியலமைப்பில் 19வது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அந்த திருத்த சட்டத்தின் ஊடாகவே சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை, ஜனநாயக ரீதியிலான நிறுவனக்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சாதகமான பெறுபேறுகளை எமது சமூகம் பெற்றுக் கொண்டுள்ளது. அவை எமது நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் மக்கள் பெற்றுக்கொண்ட உண்மையான அமையும் அதேவேளை, தாய் நாட்டின் நவீன யுகத்தை நோக்கிய பயணத்திற்கு இன்றியமையாததாகும்.

எனவே 19வது திருத்த சட்டத்தில் ஏதேனும் நடைமுறைரீதியிலான குறைபாடுகள் காணப்படுமாயின், இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டததின் கருப்பொருள் மற்றும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியிலான விடயங்களை பாதுகாத்து பலப்படுத்தி அரசியல்ரீதியில் பிரச்சனைக்குரிய விடயங்களுக்கான திருத்தங்களை பாராளுமன்ற நடைமுறைக்கமைய மேற்கொள்ள ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள்  அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என வலியுறுத்தப்பட்டுள்ளது“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

19வது திருத்தத்தின் மூலம், நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here