வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கருகிலும் பயணிகளை ஏற்றலாம்: ஆளுனர் அறிவிப்பு!

வவுனியா பழைய பஸ் நிலையத்தில் பேருந்துகள் தரித்து செல்ல வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கை சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் இன்று (06.12.2018) நடைபெற்றது.

இலங்கை போக்குவரத்துச்சபை, போக்குவரத்து அதிகாரசபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர், மாகாண போக்குவரத்து ஆணையாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர், வவுனியா வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, மற்றும் வவுனியா வர்த்தசங்கம், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் என்பன கலந்து கொண்டிருந்தன.

இதில் மூன்று முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன

01. தூர பயணம் செய்யும் பஸ்கள் தரித்து செல்வதற்கு தனியான பஸ் தரிப்பிடமும் உள்ளுர் சேவையில் ஈடுபடும் பஸ்கள் தரித்து செல்வதற்கு தனியான பஸ் தரிப்பிடமும் பிரதான வீதியில் பழைய பஸ் நிலையத்திற்கு அண்மையாக ஏற்படுத்தப்பட வேண்டும்

02. தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைகளுக்கான நேரசூசி சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் அதனை கண்காணிப்பதற்கு கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபட வேண்டும்

03. அனைத்து பஸ்களும் மூன்று நிமிடங்கள் பழைய பஸ் நிலையத்திற்கு அருகில் பிரதான வீதியில் தரித்து பயணிகளை ஏற்றிச்செல்ல வசதிகள் ஏற்படுத்த வேண்டும்

இந்த மூன்று தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்த ஆளுநர் பழைய பஸ் நிலையம் தொடர்பிலான விடயம் நீதிமன்றத்தில் இருப்பதன் காரணமாக அதன் தீர்ப்பின் பின்னராக அது தொடர்பில் முடிவுகளை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

(ஆளுனர் அலுவலக செய்திக் குறிப்பு)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here