காத்தான்குடி இளைஞன் தயாரித்த இடியப்ப இயந்திரம்!

காத்தான்குடியில் இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 1200 இடியப்பங்களை அவிக்கும் இயந்திரமொன்றை தயாரித்துள்ளார். ஒரு மணி நேரத்தில் 1200 இடியப்பங்ளையும் அவிக்க முடியும்.

காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா வீதியைச் சேர்ந்த நுஹ்மான் முகம்மது சிறாஜ் (வயது 25) எனும் இளைஞனே இந்த இயந்திரத்தை தயாரித்துள்ளார்.

மின்சாரத்தில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணித்தியாலயத்திற்கு 1200 தொடக்கம் 1500 வரையிலான இடியப்பங்களை ஒரே நேரத்தில் அவக்க முடியும்.

இந்த இயந்திரத்தை தயாரிப்பதற்கு ஆறு மாத காலம் பிடித்துள்ளதுடன் 4 இலட்சம் ரூபா செலவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here