மன்னாரில் சர்வதேச மாற்றுதிறனாளிகள் தின நிகழ்வு!

மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று சர்வதேச மாற்றுதிறனாளிகள் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

“மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்தல், உள்வாங்குதல் மற்றும் சமத்துவத்தினை உறுதிப்படுத்தல்“ என்ற தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.மோகன்றாஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

எம்.சிறிஸ்கந்தகுமார் (பிரதேச செயலாளர்- நானாட்டான்), பி.ஜெயகரன் (பிரதேச செயலாளர்- மடு), கே.சிவசம்பு (பிரதேச செயலாளர்- மன்னார் நகரம்), எஸ்.வசந்தகுமார் (பிரதேச செயலாளர்- முசலி), எஸ்.கேதீஸ்வரன் (பிரதேச செயலாளர்- மாந்தை மேற்கு) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மன்னார் மாற்று திறனாளிகளின் புனர்வாழ்வு சங்கம்,  தேனீ மாற்று திறனாளிகள் சங்கம் என்பவற்றின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரணதர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களிற்கான பரிசளிப்பும், சுய தொழில் முயற்சியாளர்களிற்காள பரிசளிப்பும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் முழுமையான புகைப்பட தொகுப்பை பார்க்க இங்கு அழுத்துங்கள்: மாற்று திறனாளிகள் தின நிகழ்வு- மன்னார் மாவட்ட செயலகம்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here