வவுனியாவில் சடலம் மீட்பு!

வவுனியா, ஈச்சங்குளம் தரணிகுளம் பிரதேசத்தில் உள்ள கிணற்றில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தற்கொலையாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

நேற்று மாலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

40 வயதான செல்வம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் சிறுநீரக நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.

வீட்டில் குறித்த நபரை காணாததையடுத்து, தேடிப் பார்க்கும் போது சடலம் கிணற்றில் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது..

அவரது கைகள் பின்புறமாக கயிற்றால் சுற்றப்பட்டிருந்தது. தனது கையை தானே கட்டியது போன்ற தோற்றம் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதனால் அது தற்கொலையாக இருக்கலாமென்ற சந்தேகம் நிலவுகிறது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here