நாமல் குமாரவின் தொலைபேசி ஹொங்ஹொங்கிற்கு செல்கிறது!

நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட தரவுகளை மீட்பதற்காக ஹொங்ஹொங்கிற்கு அனுப்பப்படவுள்ளது.

ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதி முயற்சி தகவல்களை நாமல் குமார வெளியிட்டதை தொடர்ந்து, அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில், அவரது தொலைபேசி நீதிமன்றத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தது

அழிக்கப்பட்ட குரல் பதிவுகளை மீளப்பெற, தொலைபேசியை வெளிநாட்டுக்கு அனுப்ப நேற்று குற்றப்புலனாய்வுத் துறையினர் கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்கவிடம் அனுமதி கோரினர். இதற்கமைய தொலைபேசியை விடுவித்து நீதவான் உத்தரவிட்டு ள்ளார்.

தொலைபேசியை தயாரித்த நிறுவனமுள்ள ஹொங்​ஹொங் நாட்டுக்கு அடுத்த வாரமளவில் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here