கோயில் வளாகத்தில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்;  இடமின்மையால் அனுமதித்த இந்துக்கள்

உத்தரபிரதேசத்தில் புலந்த் ஷெகரில் இடப்பற்றாக்குறை காரணமாக தொழுகை செய்ய முடியாமல் தவித்த முஸ்லிம் களுக்கு கோயில் வளாகத்தில் தொழுகை நடத்த இந்துக்கள் அனுமதி அளித்து அதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

உ.பி.யின் புலந்த்ஷெகரில் பசுவதையின் பெயரில் கடந்த திங்கள்கிழமை கலவரம் நடை பெற்றது. இதில், சயானாவின் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட் டனர். இந்த கலவரம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலையில் தப்லிக்-எ-ஜமாத்தின் இஸ்திமா(மதப்பிரச்சாரம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்) 3 நாட்களாக நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வீடு திரும்பும்போது மதக்கலவரம் தூண்ட இந்துத்துவா அமைப்பினர் கலவரம் நடத்தியதாகப் புகார் எழுந்தது. அதேசமயம், இஸ்திமாவில் கூடிய சுமார் பத்து லட்சம் முஸ்லிம்களுக்கு தொழுகை நடத்த இடப்பற்றாக்குறை இருந்துள்ளது. இதற்காக இஸ்திமா நடைபெற்ற இடத்தின் ஜெய்னூர் கிராமத்தினர் தங்கள் சிவன் கோயில் வளாகத்தை முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக திறந்துவிட்டுள்ளனர். அதோடு, தொழுகை நடத்த வசதியாக கோயில் வளாகத்தில் பாய்களை யும் இந்துக்கள் விரித்து வைக்க, அதில் மனநிறைவுடன் முஸ்லிம்கள் தொழுகையை நடத்தி உள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஜெய்னூர் சிவன் கோயிலின் பூசாரியான அமர்சிங் கூறும்போது, ‘‘தொழுகைக்கான நேரம் நெருங்கும்போது பல முஸ்லிம்கள் தொழுமை நடத்த இடமின்றி தவித்ததைக் கண்டு கிராமவாசிகள் வருந்தினர். இதற்காக அதன் பஞ்சாயத்து திடீர் எனக் கூடி முடிவு எடுத்து அவர்களுக்காக கோயில் வளாகத்தில் முதன்முறையாக இடம் ஒதுக்கினர். அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் கலவரங்கள் இந்து – முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க முடியாது’’ எனத் தெரிவித்தார்.

தொழுகைக்கு முன்பாக முஸ் லிம்கள் ‘ஒஜு’(கை, கால் அலம்பி சுத்தமாதல்) செய்வதற்காகவும் கோயிலின் குடிநீர் குழாய்களை திறந்து விட்டுள்ளனர். இதுபோல், இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கு உதாரணமாக இருந்த ஜெய்னூர் கிராமவாசிகளுக்கு சமூகவலை தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here