போராட்டத்தை கைவிடப் போவதில்லை: ஆறுமுகன் தொண்டமான்!

தொழிலாளர்களின் இரண்டாம் நாள் வேலைநிறுத்தம் வெற்றியளித்துள்ளது. ஆயிரம் ரூபா அடிப்படை சம்பள கோரிக்கை வெற்றியடையும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லையென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

“இந்த போராட்டம் இப்படியே நீடித்தால் நிச்சயம் வெற்றியளிக்கும். தொழிலாளர்களின் தொடர் போராட்டம் நிச்சயம் கம்பனிக்காரர்களை மிரள வைக்கும். ஆனால் சில தோட்டங்களில் நம்மவர்கள் வேலைக்கு செல்வதாக அறிந்தேன். இது நம்மவர்களே, நம்மை காட்டிக் கொடுப்பதாகவே அமையும்.

1000 ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்கும் வரை நாம் போராட்டத்தை கைவிடப் போவதில்லை. 600 ரூபா தரலாம் என்றுதான் கம்பனிக்காரர்கள் தெரிவித்தனர். நமது போராட்டத்தையடுத்து, 650 ரூபா தரலாமென சில கம்பனிக்காரர்கள் தெரிவித்துள்ளனர். நாம் தொடர்ந்து அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், 1000 ரூபா கோரிக்கை வெற்றியளிக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை“ என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here