இப்போது வேலை நிறுத்த போராட்டம் பொருத்தமில்லை!

முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதில்லையென தொழிலாளர் தொழிற்சங்க தலைவர் பழனி திகாம்பரம் அறிவித்துள்ளார்.

இன்று அலரி மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

தற்போது அரசாங்கமொன்று இல்லாத நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினாலும் எந்த பலனையும் அடைய முடியாதென்றும், அரசாங்கமொன்று அமைந்ததன் பின்னர், சம்பள அதிகரிப்பு பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, அலரி மாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வடிவேல் சுரேஷ்-

வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதென்பது, தொழிலாளர்களை மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக அமையக் கூடாது. தொழிற்சங்க போராட்டமென்றால், கம்பனிகளையும், தோட்டங்களையும் முழுமையாக முடக்க வேண்டும். அப்படியென்றால்தான் கம்பனிகளை மிரள வைக்கலாம். ஆனால், இந்த மாதத்தில் போராட்டம் நடத்துவது, தொழிலாளர்களை பாதிக்கும். தைப்பொங்கல் வருவதால், இப்போது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here