நாடாளுமன்ற பிரேரணைகளை நிர்வாகத்துறை புறக்கணிக்கிறது!


நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பிரேரணைகளை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கின்றது. ஆனால் நிர்வாகத்துறை நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இப்போது பிரதமரோ, அமைச்சரவையே இல்லை என சபாநாயகரான நீங்கள் கூறினீர்கள். அதையே இப்பொழுது நீதிமன்றமும் சொல்லியுள்ளது. ஆனால் 225 எம் பிக்கள் சொன்னாலும் பிரதமர் நியமனம் செய்யமாட்டேன் என்று ஜனாதிபதி சொல்வது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும். நாடாளுமன்றத்தை , நீதித்துறையை ஜனாதிபதி மதிக்க வேண்டும். நீங்கள் உரிய நடவடிக்கை எடுங்கள்“ என்று லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here