பரபரப்பிற்கு மத்தியில் 11 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகிறது!

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே, இந்திய நாடாளுமன்றம் குளிர்கால கூட்டத்தொடர் 11 ஆம் திகதி கூடுகிறது.

இதையடுத்து சபையை சுமுகமாக நடத்துவது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக, 10 ஆம் திகதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடப்பதால், தற்போதைய மக்களவையின் முழுமையான கடைசி கூட்டத்தொடர் இதுவே ஆகும்.
எனவே, இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமான, சுமுகமான கூட்டத்தொடராக நடப்பதை உறுதி செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரும்புகிறது.
கடந்த காலங்களில், எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கின. அதனால், ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் பல நாட்கள் வீணாக போய்விட்டன. இந்த கூட்டத்தொடரில் அத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்று இரு அவைகளின் தலைவர்களும் கருதுகிறார்கள்.

எனவே, சபையை சுமுகமாக நடத்துவதற்காக, அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். கூட்டத்தொடருக்கு முந்தைய நாளான 10 ஆம் திகதி, இந்த கூட்டம் நடக்கிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here