‘இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர் பிடிவாதமாக செயற்படுகிறார்’: சபாநாயகர் குற்றச்சாட்டு!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிடிவாதத்துடன் செயற்படுகிறார் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் நேரடி ஒலிபரப்புக்காக இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்துக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை ஒலிபரப்பு செய்யுமாறு பல முறைகள் ​தெரிவித்தும் அதனை ஒலிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைத்து ஊடக ஒழுங்குமுறை குறித்தும் அறிவுறுத்துமாறும், அரச ஊடகங்களை கட்டுப்படுத்துமாறும் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் பலர் வலியுறுத்தினர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here