ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.

அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து அஸ்ரீதமது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஜெயலலிதா நினைவுத்தூபியில் வீழ்ந்து வணங்கி அழுதவாறே தமது நன்றியை செலித்துயுள்ளனர்.

அத்தோடு மீன்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொண்டர்கள் என பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சியினரும் மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இதேவேளை தனது அரசியல் பயணத்தில் சலிக்காது உழைத்து வெற்றிகண்டவர் ஜெயலலிதா என்றும், அரசியலில் வெற்றி காண்பது சாதாரணமான விடயம் அல்ல  அவர் அதை கண்டார் என்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழி புகழாரம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here