நாலக டி சில்வாவிற்கு தொடர்ந்து விளக்கமறியல்!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 11 ஆம் திகதி வரையில் அவரது விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஸபக்சவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here