மகன் பார்ப்பதற்காக கிரிக்கெட்டிற்கு திரும்புகிறார் ரைபூ: இலங்கை கழகத்தில் ஒப்பந்தம்!

தேவாலய திருப்பணிகளிற்காக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் சிம்பாவே வீரர் ரரென்டா ரைபூ, தனது மகனிற்காக கிரிக்கெட்டிற்கு திரும்பகிறார்.

இளம் டெஸ்ட் கப்டன் என்ற சாதனையை நிகழ்த்திய ரைபூ, தனது 29வது வயதில் ஓய்வு பெற்றிருந்தார். எனினும், இலங்கையின் உள்நாட்டு அணியான பதுரலிய (Baduraliya Sports Club) அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் மீண்டும் அவர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடவுள்ளார்.

உலகின் இளம் டெஸ்ட் கப்டன் என்ற சாதனையை வைத்துள்ள தைபூ 11 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் 28 டெஸ்ட் போட்டிகள் 150 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடியுள்ளார்.

இவர் மகன் இவரது ஆட்டத்தைப் பார்த்ததேயில்லை என்பதற்காக, மீண்டு கிரிக்கெட்டுக்குள் நுழைய முடிவெடுத்துள்ளார் ரைபூ.

“என் மகன் ரரென்டா ஜூனியர் என்னிடம் நான் எப்படி ஆடுவேன் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறான். அவனுக்கு இப்போதுதான் இந்த கிரிக்கெட் மீது ஆர்வம் பிறந்துள்ளது. இப்போது கூட நான் மிகவும் உடற்தகுதியுடன் இருக்கிறேன். கிரிக்கெட்டில் உலகில் நான் மிகவும் பிட்டஸ்ட் வீரர் என்று என்னைக் கூறிக்கொள்ள தயங்க மாட்டேன். இப்போது என் மகனுக்காக நான் எப்படி ஆடுகிறேன் என்று பார்ப்பதற்காக மீண்டும் பாட் கட்டுகிறேன். பட்டை (බට) கையில் எடுக்கிறேன்” என்று கிரிக் இன்போவில் தன்னம்பிக்கையுடன் அவர் தெரிவித்திள்ளார்.

ரைபூ ஒரு விக்கெட் கீப்பர் பட்ஸ்மென். 28 டெஸ்ட் போட்டிகளில் 1546 ரன்களை 30.31 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார், அதிகபட்ச ஸ்கோர் 153. ஒருசதம் 12 அரைசதம் எடுத்துள்ளார். 57 கட்ச்கள் 5 ஸ்டம்பிங்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 150 ஆட்டங்களில் 3,393 ரன்களை 29.25 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 2 சதங்கள் 22 அரைசதங்கள், அதிகபட்ச ஸ்கோர் 107. இதில் 114 கட்ச்கள் 33 ஸ்டம்பிங்குகளைச் செய்துள்ளார். 17 டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 259 ரன்களை எடுத்துள்ளார்.

2012 இல் கிரிக்கெட்டை விட்டு ஓய்வுபெற்றார். 2016 இல் இங்கிலாந்து கழகமொன்றில் வீரராகவும், பயிற்சியாளராகவும் ஒப்பந்தமானார். 2018இல் சிம்பாவே கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் நியமிக்கப்பட்டார். பின்னர் இந்த வருட தொடக்கத்தில் அதிலிருந்து நீக்கப்பட்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here