ரொனால்டோ, மெஸ்ஸி ஆதிக்கத்தை முடித்து வைத்த லூகா மோட்ரிச்

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உலக கால்பந்தாட்டத்தின் தலைசிறந்த விருதான பலான் டி’ஆர் என்ற ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதில் மெஸ்ஸியும், ரொனால்டோவும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால் தற்போது குரேஷிய மிட்பீல்டர் லூக மோட்ரிச் பலான் டி’ஆர் விருதைத் தட்டிச் சென்று மெஸ்ஸி, ரொனால்டோ ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

2018 உலகக்கிண்ண கால்பந்தில் குரேஷிய அணியை முதல் முறையாக இறுதிக்குக் கொண்டு வந்ததில் லூகா மோட்ரிச்சின் மின்னல் வேக ஆட்டமும் முக்கியக் கட்டத்தில் கோல்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

33 வயதாகும் மோட்ரிச் 3வது தொடர் சம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றார். உலகக்கிண்ண கால்பந்தில் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதையும் லூகா மோட்ரிச் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மெஸ்ஸி, ரொனால்டோ இல்லாமல் முன்னதாக 2007-ல் பிரேசில் நட்சத்திர வீரர் காகா பலான் டி’ஆர் விருதை வென்றிருக்கிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோ ரொப் 10 வீரர்களில் 2ம் இடத்திலும் லயனல் மெஸ்ஸி 5ம் இடத்திலும் உள்ளனர். ஆண்டியோன் க்ரீஸ்மன் 3வது இடத்திலும் உலகக்கிண்ணத்தில் கலக்கிய கிலியன் மபாப்பே 4ம் இடத்திலும் உள்ளனர். இருவரும் உலக சம்பியன் பிரான்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள்.

ரொப் 10 சிறந்த கால்பந்து வீரர்கள் பட்டியலில் பிரேசில் மற்றும் பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் அணியின் நெய்மருக்கு இடமில்லை.

1. லூகா மோட்ரிச் (குரேஷியா)

2. கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்த்துக்கல்)

3. அண்டாய்ன் கிரீஸ்மன் (பிரான்ஸ்)

4. கிலியன் மபாப்பே (பிரான்ஸ்)

5. மெஸ்ஸி (அர்ஜெண்டினா)

6. மொகமத் சலா (லிவர்பூல், எகிப்து)

7. ரஃபேல் வரானே (ரியால் மட்ரிட், பிரான்ஸ்)

8. ஈடன் ஹசார்ட் (செல்ஸீ, பெல்ஜியம்)

9. கெவின் டி புருய்ன் (மான்செஸ்டர் சிட்டி, பெல்ஜியம்)

10. ஹாரி கேன் (டாட்டன்ஹாம், இங்கிலாந்து)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here