விண்ணை நோக்கி சென்றது இஸ்ரோவின் ஜிசாட்-11

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்ததிலேயே மிகுந்த எடையுள்ளதும், அதிநவீனமான முறையில் செய்யப்பட்டதுமான ஜிசாட்-11 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியேன் ராக்கெட் மூலம் இன்று புதன்கிழமை காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தப் பணி வெற்றிகரமாக அமைந்தததாக இஸ்ரோ தமது இணைய தளத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரூ-வில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏரியேன்-5 VA-246 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைக் கோளின் எடை 5,854 கிலோ ஆகும்.

இந்தியாவில் அதிவேக இணைய இணைப்புகளைப் பெற இந்த செயற்கைக்கோள் உதவும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பெருநிலப் பகுதியிலும், தீவுகளிலும் இணையத் தொடர்புக்கு உதவும் வகையில் இந்த செயற்கைக் கோளில் மல்டி-ஸ்பாட் பீம் ஆண்டெனா உள்ளது.

இது பிராண்ட்பேண்ட் சேவையில் இன்றியமையாத சேவையை ஆற்றும் என்றும், அடுத்த தலைமுறை செயலிகளை செயல்படுத்துவதற்கான தளத்தை அமைத்துக்கொடுக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here