இந்தோனேசியாவில் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு: 24 பேர் பலி!

இந்தோனேசியாவின் கிழக்கு பப்புவா மாகாணத்தில் துப்பாக்கிதாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 24 கட்டட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

மலைகள் நிரம்பிய பகுதி ஒன்றில் பணியாளர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த படுகொலை சம்பவம் குறித்து விசாரணை செய்ய அனுப்பப்பட்ட படைவீரர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகள்தான் இதற்கு காரணம் என்கிறது போலீஸ். சுதந்திர பப்புவாவிற்காக பல தசாப்தங்களாக அந்த பகுதியில் மக்கள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here