சட்ட விரோத கருக்கலைப்பு மையத்தில் கடந்த 20 ஆண்டுகளாக 19,000 பெண் சிசுக்களை கொலை செய்த பெண்!

திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் சட்டவிரோதமாக சிசுவின் பாலனத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதாக வந்த புகாரின் பேரில், சென்னை ஊரக மற்றும் மருத்துவ நலப்பணிகள் அலுவலக கண் காணிப்பாளர் கமலக்கண்ணன் தலைமையிலான சிறப்புக் குழுவினர் கடந்த 1-ம் தேதி நள்ளிரவு கருக்கலைப்பு மையத்துக்கு ‘சீல்’ வைத்தனர்.

இந்த வழக்கில், சிசுவின் பாலினத்தை கண்டறிந்து பெண் சிசு என்று தெரியவந்ததும் கருக்கலைப்பு செய்து வந்த ஆனந்தி, அதற்கு துணையாக இருந்த அவரது கணவரும், சென்னை முகப்பேரில் உள்ள வீட்டு வசதி வாரியத்தின் உதவிப் பொறியாளருமான தமிழ்ச்செல்வன் மற்றும் தரகராக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமார் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங் கேற்றார். அதே விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆட்சியர் கந்தசாமி, “திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் சிசுக்கள் கொலை செய்யப்படுவதால் தேசிய அளவில் தலைசாய்ந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று வேதனையுடன் கூறினார்.

மேலும் அவர் பேசும்போது, “மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 1,000 ஆண்களுக்கு 920 முதல் 925 பெண்கள் என விகிதாச்சாரம் இருந்தது. பெண்களுக்கு எதிரான சமுதாயத்தை நோக்கி செல்கிறோம். இதுதொடர்பாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், படிக்கவே இல்லை. பிளஸ் 2 கூட தேர்ச்சி பெறவில்லை. அரசு பல்வேறு முயற்சி எடுத்து கடந்த 2012 மற்றும் 2016-ம் ஆண்டு அவரை கைது செய்ததுள்ளது. அவரது செல்போனை ஆய்வு செய்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 25 கருக்கலைப்புக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளாக 19 ஆயிரம் பெண் சிசுக்களை, அந்த பெண் கொன்றுள்ளார். 19 ஆயிரம் பெண்களைக் கொன்று சமுதாயத் துக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு மூலம் பெண்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கியுள்ளனர். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அமைச்சர் சேவூர் எஸ்.ராமச் சந்திரன் பங்கேற்ற அரசு விழாவில், சட்ட விரோத கருக்கலைப்பு மூலம் பெண் சிசுக்கள் கொலை செய்யப் பட்டு வருவது குறித்து ஆட்சியர் கந்தசாமி வெளிப்படையாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here