சவுதியில் நடந்த அதிசயம்!

சவூதி அரேபியாவில் 35 வருடமாக ஒரே வீட்டில் வாகன ஓட்டுநராக பணி செய்த  இந்தியரை, அவரது முதலாளி குடும்பத்தினர் வரிசையில் நின்று ஆரத்தழுவி முத்தமிட்டு வழியனுப்பி வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சவுதியில் பணிபுரிபவர்கள் பாதுகாப்பற்ற வகையில் தான் எப்போதும் உயிரை கையில் பிடித்த வண்ணம் இருப்பார்கள்.

காரணம் அந்நாட்டில் சட்டம் மிகவும் கடுமையானது என்பதும், மரண தண்டனை கொடுமையான முறையில் நிறைவேற்றப்படும் நாடு என்பதனாலும் ஆகும்.

இந்நிலையில் அங்கு வீட்டு வேலைக்கு செல்பவர்கள் மிகவும் துன்புறுத்தப்படுவதும், அவர்களுக்கு ஊதியம் சீராக வழங்கப்படுவதில்லை என்பதும் நீண்டகாலமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.

இப்படிப்பட்ட நிலையில் மேற்படி ஒரு ஊழியரை முதலாழி குடும்பத்தினர் அன்போடு வழியனுப்பி வைத்தது மாத்திரமின்றி வாழ்நாள் முழுவதும் மாதா மாதம் ஊதியத் தொகையை அனுப்பிவைப்பதாகவும் முதலாழி குடும்பம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here