அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதியின் உடலுக்கு ட்ரம்ப் அஞ்சலி!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் H.W. புஷ் இன் உடலிற்கு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா ட்ரம்ப் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நேற்று இரவு, ஜனாதிபதி டிரம்ப் மற்றும்  மெலனியா டிரம்ப் ஆகியோர், பிளேயர் ஹவுஸில் வைக்கப்பட்டுள்ள H.W. புஷ்ஷின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் நேற்று மாலை, துணைத் தலைவர் மைக் பொம்பியோ 41 ஆவது ஜனாதிபதிக்கு புகழாரம் சூட்டினார். அவரது பாத்திரம், அறிவு மற்றும் பொது சேவைக்கு வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை நினைவு கூர்ந்தார். முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் தனது 94 ஆவது வயதில் காலமானார்.

இவர் 41 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here