நாளை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பெறாது!

நாளைய தினம் நாடாளுமன்றத்தில் எந்த வாக்கெடுப்பும் இடம்பெறாதென தமிழ்பக்கத்திற்கு தகவல் தந்த ஐக்கிய தேசிய முன்னணியின் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்திற்குள் மஹிந்த ராஜபக்ச அரசிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகளையும் கவனத்திலெடுத்து, புதிய அரசாங்கத்தை அமைக்கும்படி ஜனாதிபதியை கோரும் பிரேரணை நாளைய தினம் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், நாளைய தினம் அப்படியொரு வாக்கெடுப்பு இடம்பெறாது என அந்த பிரமுகர் தெரிவித்தார்.

எனினும், இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முடியவில்லை.

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணியினர் ஜனாதிபதியை சந்தித்தபோது, நாடாளுமன்றத்திற்குள் முறைப்படி பிரேரணையை நிறைவேற்றும்படியும், அதை ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here