தன்பாலின ஈர்ப்பு கவலை அளிக்கிறது: போப் பிரான்சிஸ்

தன்பாலின ஈர்ப்பு கவலை அளிப்பதாக உள்ளது என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் போப் பிரான்சிஸ் கூறும்போது, ”தன்பாலின ஈர்ப்பு மிகுந்த கவலைக்குரியதாக மாறி வருகிறது. இந்தக் காலத்தில் தன்பாலின ஈர்ப்பு என்பது நவீனத்தின் அடையாளம் ஆகி விட்டது. இது தேவாலயங்களைப் பாதிக்கிறது. அவர்கள் தேவாலயத்தில் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டாம்.

தேவலாயத்துக்குள் நுழையும் மதகுருமார்கள் பிரம்மச்சரியத்தின் மீதான உறுதி மொழியை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் மனதளவிலும், உணர்வளவிலும் பக்குவம் அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

மதகுருமார்களைத் தேர்ந்தெடுக்கும் தேவலாயத்தின் நிர்வாகம் இதில் கவனமாக செயல்பட வேண்டும். தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களை தேவாலயப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டாம். இது பெண் குருமார்களுக்கும் பொருந்தும்” என்றார்.

தேவலாயங்களைப் பொறுத்தவரை தன்பாலின ஈர்ப்பு என்பது பாவத்துக்குரிய செயல் என்று கூறப்பட்டது. பின் 2013 ஆம் ஆண்டு, இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறிய போப் பிரான்சிஸ் , ”ஒரு நபர் தன்பாலின ஈர்ப்பு கொண்டவராக இருந்தால் அவரைது பாத்திரத்தைப் பற்றி தீர்மானிக்க நான் யார்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தேவலாயங்களில் உள்ள தன்பாலின உறவுகள் குறித்து தற்போது தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here