இயற்கை பேரிடர்களால் பாதிக்கக்கூடிய முதல் 15 நாடுகள் எவை?

இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் கடுமையான அபாயத்தில் உள்ள 15 நாடுகளில், 9 தீவுகள் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

2018 உலக ஆபத்து அறிக்கை, 172 நாடுகளில் பூகம்பம், சுனாமி, சூறாவளி மற்றும் வெள்ளம் போன்ற ஆபத்துகள் குறித்து ஆய்வு செய்தது. அப்படி இயற்கை பேரிடர்கள் வந்தால் எவ்வாறு அதனை அந்நாடுகள் எதிர்கொள்ளும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் உள்ள ரூர் பல்கலைக்கழகம், போசம் மற்றும் மேம்பாட்டு உதவி கூட்டணி என்ற அரசுசாரா நிறுவனம் சேர்ந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.

முதல் 15 குழந்தைகளின் நிலையும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின் தரவுகளின்படி, உலகில் நான்கில் ஒரு குழந்தை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கிறது.

மேலும், மோதல்கள் அல்லது இயற்கைப் பேரிடர்களால் 2017ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்த, பாதிக்கும் மேற்பட்ட மக்கள் 18 வயதுக்கு கீழ் உடையவர்கள் ஆவர்.

ஆபத்தான பகுதிகள் (Source : World Risk report 2018)

நாடுகள்                                  ஆபத்து பட்டியல்

1.வனுஅடூ                                       50.28

2.டொங்கா                                     29.42

3.பிலிப்பைன்ஸ்                              25.14

4.சொலமன் தீவுகள்                        23.29

5.கயானா                                       23.23

6.பப்புவா நியூ கினியா                   20.88

7.குவாட்டமாலா                              20.60

8.புருனை                                        18.82

9.பங்களாதேஷ்                               17.38

10.பிஜி                                            16.58

11.கோஸ்டாரிகா                            16.56

12.கம்போடியா                               16.07

13.கிழக்கு திமொர்                         16.05

14.எல் சல்வடோர்                            15.95

15.கிரிபடி                                        15.42

உயரும் கடல் மட்டம் உள்ளிட்ட பல்வேறு பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்படும் அபாயங்களில் உள்ள பல தீவுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தென் பசிபிக் பகுதியில் இருக்கும் சிறிய தீவான வனுஅடூ, உலகில் பாதிக்கப்படும் நாடுகளில் முதலில் உள்ளது. அதன் அருகில் உள்ள டொங்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.

தீவுகள்

சுமார் 104 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள பிலிப்பைன்ஸ் தீவுகள் மூன்றாவது இடத்தில் உள்ளது.

மத்திய மற்றும் தென் பசிபிக் கடலில் இருக்கும் தீவுகள் ஒட்டுமொத்தமாக அபாயகரமான பகுதியாக இருப்பதாக ஜெர்மன் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ள முதல் 50 நாடுகளில் ஆபிரிக்க நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

ஆய்வறிக்கையின் படி, குறைந்த அபாயம் உள்ள நாடு கட்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here