900 ஆண்டுகளின் முன் ஒளித்து வைத்த தங்கக்காசுகள் மீட்பு!


தற்போது இஸ்ரேல் அமைந்துள்ள பகுதியில் இருந்த பழமையான துறைமுகம் அருகே 900 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க காசுகள் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிணறு அருகே கற்களுக்கு நடுவே இருந்த வெண்கல பானையில் ஒரு காதணி உடன் இந்த தங்க காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் யாரோ ஒருவரால் இவை புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், அதனை அவர் திரும்ப எடுக்கவில்லை என்று நம்பப்படுகிறது. 1101ஆம் ஆண்டு இந்த பகுதியில் நடந்த போரில் சிலுவை படையால் இதனை புதைத்து வைத்தவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here