விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கௌரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி வீடியோ!

விமானத்தில் பயணித்த முன்னாள் ஆசிரியருக்கு இதயத்தை உருக்கும் வகையில் நன்றி சொல்லி, அவரிடம் படித்த விமானி கௌரவித்த வீடியோ வைரலாகியுள்ளது. துருக்கியில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

துருக்கி பத்திரிகையாளர் ஒருவர் இந்த வீடியோவை வெளியிட்டார்.

அந்த வீடியோவில், துருக்கி ஏர்லைன்ஸ் விமானி மித்தாட் ஓகன் ஒனான் விமானத்தை ஓட்ட எத்தனிக்கிறார். அப்போது எதேச்சையாக விமானத்தில் தனது ஆசிரியர் பயணிப்பதைக் கவனிக்கிறார். உடனே மைக்ரோஃபோன் மூலம் ஆசிரியருக்கு நன்றி சொல்கிறார்.

உணர்வுப்பூர்வமாக மித்தாட் பேசப் பேச, அதைக் கேட்கும் ஆசிரியரின் கண்கள் உணர்ச்சிப் பெருக்கில் குளமாகின்றன. அத்துடன் ஆசிரியரை நோக்கி வரும் விமானக் குழுவினர், அவருக்கு பொக்கே அளித்துப் பெருமைப்படுத்துகின்றனர். மரியாதையுடன் அவரின் கைகளில் முத்தமிடுகின்றனர்.

இறுதியாக விமானியும் ஆசிரியரிடம் வந்து ஆசி பெறுகிறார். இதயத்தை உருக்கும் இந்த சம்பவத்தைப் பார்த்த ஏராளமான சக பயணிகள், கண்ணீர் விட்டு நெகிழ்ந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here