வவுணதீவு கொலை: கைதான முன்னாள் போராளி வீடு சல்லடை!

வவுணதீவு பொலிசார் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அஜந்தன் என்ற முன்னாள் போராளியின் வீட்டில், இன்று சல்லடையிட்டு தேடுதல் நடத்தப்பட்டது.

தாண்டியடி, காஞ்சிரங்குடாவில் உள்ள அவரது வீட்டில் பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில், அவரது வீட்டு கிணற்றில் நீர் இறைக்கப்பட்டும் சோதனை செய்யப்பட்டது.

இதேவேளை, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்படையவர் என்ற சந்தேகத்தில் இன்னொரு முன்னாள் போராளி கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் குறிப்பிடுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here