ஜனாதிபதியின் இஸ்டப்படி பிரதமரை நியமிக்க முடியாது; தேர்தலிற்கு நாமும் தயார்: ரணில் சவால்!

எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. நாம் தேர்தலிற்கு அஞ்சவில்லை. தேர்தல் ஒனறுதான் தேவையென்றால், அதற்கு நாமும் தயார். ஆனால், அதற்கு முன்னர் சட்டபூர்வமான அரசாங்கமொன்றை ஏற்படுத்த வேண்டுமென ஐ.தே.வின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது இஸ்டத்திற்கு பிரதமரை தெரிவு செய்ய முடியாது, அது நாடாளுமன்றத்தில் முடிவு செய்ய வேண்டிய விடயமென்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தினாலேயே உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்கத் தொடங்கியுள்ளன.

ஜனாதிபதிக்கு என்ன தேவை என்ற அடிப்படையில் செயற்பட முடியாது ஜனாதிபதி விரும்பியபடி பிரதமரை நியமிக்கவும் முடியாது. யாரை பிரதமராக நியமிப்பது என்பதனை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியனவற்றின் தீர்ப்புக்களை வரவேற்கின்றோம். இன்று இலங்கையில் இந்திய உச்ச நீதிமன்றத்தினைப் போன்றே சுயாதீனமான நீதிமன்றக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்தல்களுக்கு நாம் அஞ்சியது கிடையாது அனைத்து கட்சிகளும் தேர்தலைக் கோரினால் நாம் மட்டும் தேர்தலை நிராகரிக்க முடியாது. எனினும் தேர்தலை நடத்த முன்னதாக சட்ட ரீதியான அரசாங்கமொன்று இருக்க வேண்டும்.

அரசியல் அமைப்பின் பிரகாரம் அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமானது. அரசியல் அமைப்பிற்கு புறம்பான வகையில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை.

சர்வாதிகாரியாக நடக்காமல் அரசியலமைப்பை பின்பற்றுமாறு ஜனாதிபதியிடம் கேட்கிறேன். தேர்தல் தான் தேவை என்றால் சட்டப்பூர்வமான அரசு ஒன்று முதலில் ஏற்படுத்தப்பட வேண்டும். பின்னர் விசேட தீர்மானமொன்றை பாராளுமன்றில் நிறைவேற்றி தேர்தலுக்கு செல்வோம்“ என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here