பொலிசார் கொல்லப்பட்டதற்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் இரண்டு பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றும் முன்னாள் போராளிகள், பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கனகபுரம் உதயநகர் சந்தியில் இருந்து ஆரம்பித்து டிப்போ சந்தி வரை ஆர்ப்பாட்டம் சென்றடைந்தது.

இலங்கையில் நிலவும் அமைதியை குலைத்து, மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்கப் போவதில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களம், கிளிநொச்சி இராணுவ கட்டளை பீடத்தின் கீழ் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here