புகையிரதம் மோதி யானை பலி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் புகையிரதம் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

இன்று அதிகாலை கெழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்த தபால் புகையிரதத்தில் மேததுண்டே யானை உயிரிழந்துள்ளது.

கடந்த இரண்டு தினங்களிற்கு முன்னர் பனிக்கன்குளத்திற்குள் புகுந்த யானை ஒன்றால் மக்கள் பீதியடைந்திருந்தனர். தமது விவசாய நிலங்களிற்குள் யானை புகுவதாக மாங்குளம் பொலிஸ் நிலையம், மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ஊடாக
வனஐீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

எனினும், இந்த தகவல் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த யானையே புகையிரதத்தில் சிக்கி உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். தமது முறைப்பாட்டையடுத்து உடனடியாக அதிகாரிகள் செயற்பட்டிருந்தால், யானையை காப்பாற்றியிருக்கலாமென பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here