நாளையும் கலரிகள் மூடப்படும்!

நாளைய நாடாளுமன்ற அமர்விலும் கலரிகள் மூடப்படவுள்ளன.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளையும் நிறைவேற்றக் கோரி, நாளை நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படலாமென தெரிகிறது.

நாளைய தீர்மானத்தை ஏற்றுக்கொள்வேன் என ஜனாதிபதியும் கூறியுள்ளார்.

அண்மைய நாடாளுமன்ற அமர்வுகள் சர்ச்சையாவதையடுத்து, பொதுமக்களிற்கான கலரிகள் மூடப்பட்டே, கடந்த சில அமர்வுகள் இடம்பெற்றன. நாளைய அமர்வும் அப்படியே இடம்பெறுமென படைக்கல சேவிதர் காரியாலம் அறிவித்துள்ளது.

அந்த அறிவித்தலில் பொதுமக்கள் கலரிகள், சபாநாயகர் கலரி ஆகியன மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here