ஆளே மாறிய த்ரிஷா!

நடிகை திரிஷா சமீபத்தில் கடற்கரை பகுதியில் உள்ள ஓய்விடத்தில் புன்சிரிப்புடன் ரிலாக்ஸாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், ‘கமோ எஸ்டாஸ்’ என்ற வார்த்தையும் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்பானிஷ் மொழியில் கமோ எஸ்டாஸ் என்பதற்கு ‘எப்படி இருக்கீங்க’ என்று அர்த்தம். மத்திய அமெரிக்காவில் உள்ள கோஸ்டா ரிகா நாட்டிற்கு சென்றிருக்கும் திரிஷா அங்குள்ள கரிபியன் கடற்கரை பகுதிக்கு சென்று நேரத்தை செலவழித்ததுடன் கடலில் நீந்தி மகிழ்ந்தார்.

இங்கு ஸ்பானிஷ் மொழி பேசப்படுகிறது. அதை குறிக்கும் வகையில் ஸ்பானிஷ் மொழியில் நலம் விசாரிப்பதற்கு என்ன வார்த்தையை பயன்படுத்துவது என்று விசாரித்து அதை டுவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். கமோ எஸ்டாஸ் (எப்படி இருக்கீங்க) என்று அவர் ரசிகர்களிடம் நலம் விசாரித்ததற்கு பலர் லைக் தெரிவித்திருக்கின்றனர். பிறகு ரசிகர்கள், ‘நீங்க ரொம்ப சூப்பரா இருக்கீங்க’ என்று பதில் தெரிவித்திருக்கின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here