வர்த்தமானி அறிவிப்பிற்கெதிரான மனு விசாரணை: ஏழு நீதியரசர்கள் முன்னிலையில் இன்று ஆரம்பம்!

நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று மீளவும் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன.

இன்று முதல் தொடர்ச்சியாக எதிர்வரும் மூன்று நாட்களுக்கு குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளன.

பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஏழு நீதியரசர்களை கொண்ட ஆயத்தின் முன்னிலையில் மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னதாக இந்த மூன்று நீதியரசர்களை கொண்ட ஆயத்தின் முன்பாக மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நாடாளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்பின்னர், முழுமையான ஆயத்தின் முன் வழக்கை விசாரிக்க வேண்டுமென மஹிந்த அணியினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனடிப்படையில் ஏழு நீதியரசர்களை கொண்ட ஆயம் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்கள் புவனெக அலுவிஹார, சிசிர டி ஆப்ரு, பிரியன்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்த்தன, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ ஆகியோர் இந்த ஆயத்தில் உள்ளடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here