மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சூரியபுர பகுதியில் உள்ள வயல் பிரதேசத்தில் நேற்று(3) அதிகாலை மின்சாரம் தாக்கி காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளது.

இதன் வயது சுமார் நாற்பது வருடங்கள் மதிக்கத்தக்கதென வனஜீவராசி பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சூரியபுர பகுதியில் வேளாண்மை மற்றும் பயிர்ச் செய்கைகளிற்குள் நுழைய முற்பட்ட போதே, இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

யானைகள் உணவைத் தேடிச் செல்லும்போது, ஏற்படும் உயிரிழப்புக்கள் இலங்கையில் அதிகரித்துள்ளன. இன்னும் 18 வருடங்களில் இலங்கையில் யானைகள் அரிதாகிவிடலாமென வனஜீவராசிகள் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here