பெண் விவகாரத்தாலேயே இலங்கை இளைஞர் சிக்கவைக்கப்பட்டார்: உஸ்மான் கவாஜாவின் சகோதரர் கைது!

இலங்கை இளைஞர் நிஸாம்டீனை போலியான வழக்கில் சிக்க வைத்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் உஸ்மன் கவாஜாவின் சகோதரர் இன்று கைதாகியுள்ளார்.

பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதாகியிருந்த நிஸாம்டீன், ஒரு மாத காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் விடுதலையானார்.

சிட்னி பல்கலைக்கழகத்திலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பு புத்தகத்தின் அடிப்படையில், அவுஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அந்த குறிப்பு புத்தகத்திலுள்ள கையெழுத்துக்கள் நிஸாம்டீனுடையவை அல்ல என்று நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார்.

எனினும், விசாரணைகளின் போது, இந்த வழக்கில் அவர் போலியாக சிக்கவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தனிப்பட்ட குரோதத்தாலேயே நிஸாம்டீனை பழிவாங்கவே அவர் சிக்கவைக்கப்பட்டுள்ளார் என நியுசவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்பின்னர், அவுஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் உஸ்மான் கவுஜாவின் சகோதரர் அர்ஸலான் கவாஜா விசாரிக்கப்பட்டிருந்தார். நிஸாம்டீன் பயங்கரவாத குற்றச்சாட்டில் போலியாக சோடிக்கப்பட்டு சிக்க வைக்கப்பட்டிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நியுசவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இன்று காலை அர்ஸலான் கவாஜா மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பெண் விவகாரமொன்றினால் ஏற்பட்ட குரோதத்தினாலேயே நிஸாம்டீன் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார் எனப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here