வைரலாகும் அமலா பாலின் லுங்கி போஸ்!

நடிகை அமலாபால் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடி… இல்லை, நடித்துக் கொண்டிருக்கிறார். பிரபலமாக இருந்தபோதே, இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் முடித்துக் கொண்டு, செட்டில் ஆனார்.

ஆனால் சில காலத்திலேயே கருத்து வேறுபாடு வந்து, இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பின் நடிக்க வந்த அமலா பால், நல்ல கதையம்சம் உள்ள படங்களில், அழுத்தம் திருத்தமான வேடங்களில் நடித்து வருகிறார். கூடவே, கவர்ச்சியிலும் தாராளமாக இருக்கிறார். விவாகரத்தானாலும், இளம் நாயகிகளே மிரளும் வகையில் அம்மணி தாராளம் காட்டி வருகிறார்.

அவர் நடிக்கும் ஆடை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி மிரட்டியது.

போதாததற்கு, அண்மையில் நடிகர் விஷ்ணுவை இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என்கிற தகவல் பரவியது. அது வதந்தியென இரு தரப்பும் பின்னர் விளக்கமளித்தனர்.

இப்படி சர்ச்சைகளும், பரபரப்புக்களும் தன்னைச் சுற்றி இருந்தாலும், அதையெல்லாம் கவனிக்காமல் அமலா பால் ஜாலியாக இருக்கிறார். அவரது சமூக வலைத்தளங்களே அதற்கு சாட்சி. ஜாலியாக இருக்கும் படங்களை அடிக்கடி பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் அவர் பதிவேற்றிய படமே இது. அதில் அவர் சிகப்பு கலர் லுங்கி அணிந்து, தொடை தெரியும் அளவுக்கு அதை தூக்கி கட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here