ஜனாதிபதி- ஐ.தே.மு பேச்சில் இணக்கமில்லை!

ஜனாதிபதிக்கும், ஐ.தே.மு தலைவர்களிற்கும் இடையில் நடந்த சந்திப்பில் இணக்கங்கள் எட்டப்படவில்லை. இந்த கலந்துரையாடலில் இணக்கம் ஏற்படாததையடுத்து, இலங்கை அரசியல் நெருக்கடி தொடரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது.

ரணிலை பிரதமராக்க மாட்டேன் என்ற தனது வழக்கமான உடும்புப்பிடியிலேயே ஜனாதிபதி காணப்பட்டார். இதனால், இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

மைத்திரியுடனான சந்திப்பில் பலன் இல்லையென்பதால், இனி அவருட் சந்திப்புக்களை நடத்தப் போவதில்லையென ஐ.தே.மு தலைவர்கள் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here