பேஸ்புக் வில்லங்கம்: யாழில் பாடசாலை மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு!

யாழில் பாடசாலை மாணவியொருவர் முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டுள்ளார். மூன்று பேர் கொண்ட கும்பல் இந்த அட்டூழியத்தை புரிந்துள்ளது.

வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலைக்குச் செல்லும் வழியில் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார். முச்சக்கரவண்டியில் முல்லைத்தீவிற்கு கடத்திச் செல்லப்பட்டு, அங்கு வைத்தே சீரழிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. மாணவியைத் தேடி அலைந்த உறவினர்கள் 2 நாள்களின் பின்னர் முல்லைத்தீவுப் பகுதியில் வைத்து பாழடைந்த கொட்டில் வீடொன்றிலிருந்து மீட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை முல்லைத்தீவில் வைத்து பொலிசார் கைது செய்தனர். அவனை, மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தியபோது, வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவி தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த மாணவி, கடந்த வியாழக்கிழமை பாடசாலைக்குச் சென்றுள்ளார். எனினும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.எனினும் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையை எடுக்காத நிலையில் உறவினர்கள் ஊர் இளைஞர்களுடன் மாணவியைத் தேட ஆரம்பித்தனர்.

ஊர் இளைஞன் ஒருவன் மீது சந்தேகம் கொண்ட இளைஞர்கள் குழு உறவினர்களையும் அழைத்துக்கொண்டு முல்லைத்தீவுக்குச் சென்று அங்கு தேடியுள்ளனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் மாணவி இருந்த இடம் கண்டறியப்பட்டது. அங்கு சென்ற உறவினர்கள் மாணவியை காயங்களுடன் மீட்டனர்.

மாணவியை யாழ்ப்பாணம் அழைத்து வந்த உறவினர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.

இதேவேளை, மாணவியைக் கடத்திச் சென்று கொடுமைப்படுத்திய ஒருவன் கைதாகியுள்ளதாக பொலிசார் கூறியபோதும், எஞ்சிய இருவரும் தப்பித்துள்ளனர். அவர்களை விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

“மாணவியும் நானும் முகநூல் ஊடாகக் காதலித்தோம். அதனால் அவரை அழைத்துச் சென்று முல்லைத்தீவில் வாழத் தீர்மானித்தேன்“ என கைதானவன் வாக்குமூலம் வழங்கியுள்ளான்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here