காலையில் முதல் வேலையாக மேன்முறையீடு: மஹிந்த அறிவிப்பு!

இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால தடைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். சற்று முன்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த தீர்ப்பில் தனக்கு உடன்பாடு கிடையாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேரின் சத்தியக்கடதாசிகளுடன் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகிக்கவும், அவரது அமைச்சரவை இயங்கவும் இடைக்கால தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பிலேயே தனக்கு உடன்பாடு கிடையாதென தெரிவித்துள்ளார். நாளை காலையில் முதல் வேலையாக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்ரோபர் 26ம் திகதி முதல் பிரதமர் அலுவலக கடிதத் தலைப்பிலேயே அறிக்கைகளை வெளியிட்டு வந்த மஹிந்த ராஜபக்ச, இந்த அறிக்கையை தனது பிரத்தியே கடித தலைப்பிலேயே வெளியிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here