அறணைக் கொத்து: ஹோட்டலுக்கு சீல்!

காத்தான்குடியில் ஹோட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்ட கொத்துரொட்டிக்குள் அறணையும் கிடந்ததாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, அந்த ஹோட்டல், சீல் வைத்து மூடப்பட்டது.

காத்தான்குடி – ஆறாம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள குறித்த ஹோட்டலில் நேற்றிரவு (02) கொத்துரொட்டி பார்சலொன்றை வாங்கிச்சென்ற நபரொருவர், அதற்குள் அறணையொன்று இறந்து கிடப்பதைக் கண்டு, அது தொடர்பாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யூ.எல்.நசிர்தீனிடம் எழுத்துமூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து, சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் ஹோட்டலுக்குச் சென்ற பொதுச் சுகாதார அதிகாரிகள் குழு, ஹோட்டலை பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன், ஹோட்டலை மூடிச் சீல் வைத்தனர்.

அத்துடன், குறித்த ஹோட்டலில் இருந்து பழுதடைந்த எண்ணெய் உட்பட சில உணவுப் பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

உரிய சுகாதார முறைகளைப் நிறைவேற்றி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் பரிசோதனையின் பின்னரான அனுமதியை பெற்ற பின்னரே ஹோட்டல் மீண்டும் திறக்கப்பட வேண்டுமென அதிகாரிகள் பணித்துள்ளனர்.

மேலும், குறித்த ஹோட்டல் உமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றிரவு சுமார் பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் மனித பாவனைக்கு உதவாத பெருமளவு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here