இனி மஹிந்தவை பிரதமரென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும்!

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகிப்பதற்கும், அவரது அமைச்சரவை இயங்குவதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ச எம்.பியை, பிரதமர் என குறிப்பிடுவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டிய சூழலை ஏற்படுத்துமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத நிலையிலும், பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியை விட்டு இறங்கமாட்டேன் என அடம்பிடித்து வருகிறார்.

அவர் பிரதமராக பதவி வகிப்பதும், அவரது அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் இயங்குவதும் சட்டவிரோதமானதென குறிப்பிட்டு 122 எம்.பிக்கள் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வரும் 12ம் திகதி வரை பிரதமர், அமைச்சரவைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்ட அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்த ராஜபக்ஷவை, தொடர்ந்தம் பிரதமர் என குறிப்பிடுவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்துமென ஐ.தே.க எச்சரித்துள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் 12ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதேசமயம், வரும் 7ம் திகதி நாடாளுமன்ற கலைப்பு வரத்தமானிக்கு எதிரான வழக்கு விசாரணை இடம்பெறும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here