வவுணதீவில் பொலிஸ் கொலையுடன் புலிகளை இணைக்கிறாரா ரோஹித்த அபேகுணர்தன

வவுணதீவில் பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமைக்கு மாவீரர்தினம் நடத்தவிடாதமையே காரணம் என்றும், தமிழ் அரசியல் கைதிகள் ஆபத்தானவர்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணர்தன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கூறிய அவர்,

“வவுணதீவில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாவீரர் தின நிகழ்வுகளைத் தடுத்த காரணத்தால் தான் அவர்கள் கொலைச் செய்யப்பட்டார்கள்.

கடந்த வருடங்களில் மாவீர் தின நிகழ்வுகள், அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது. இந்த முறை அது தடுக்கப்படடுள்ளது. அதனாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது”

அன்று விடுதலைப் புலிகளை தோற்கடிக்க எமக்கு உதவி தேவைப்பட்டது. அதற்காக பிள்ளையான் , கருணா ஆகியோரை இணைத்துக் கொண்டோம். இது ஒரு போர் வியூகம்.

ஆனால் அதன் பின்னர் அவர்கள் ஆயுதத்தினை கைவிட்டு ஜனநாயக வழிக்கு மாறினார்கள். அவர்கள் எம்முடன் இணைந்து அரசியல் பயணத்தில் ஈடுபட்டார்கள்.

இன்று கூட்டமைப்பினர் விடுவிக்க கோருபவர்கள் நாட்டிற்கு ஆபத்தானவர்கள். அவர்கள் இறுதிவரையில் ஆயுதமேந்தி, களமாடி எமது இராணுவத்தினரை அழித்த ஆபத்தானவர்கள்” எனக் கூறியுள்ளார்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here