மஹிந்தவிற்கு எதிரான மனு விசாரணைக்கு எடுக்கப்படுமா?: 3 மணிக்கு தீர்ப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் 3 மணிக்கு தீர்மானிக்கப்படும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த மனு தொடர்பில் இரு தரப்பு சட்டத்தரணிகளும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்தே குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதா இல்லைா என்பது தொடர்பில் மாலை 3 மணிக்கு தெரிவிப்பதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் சரியான முறையில் நிறைவேற்றப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சார்பான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here