மன்னாரில் கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தால் உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன!

மன்னார் வை.எம்.சி.ஏ (கிறிஸ்த்தவ வாலிப சங்கம்) அமைப்பினரால் கடந்த 14 வருடங்களுக்கு மேலாக வருட இறுதியில் கிறிஸ்த்து பிறப்பை முன்னிட்டு பரிசுப்பொதிகள் வழங்கப்படுவது வழக்கம். இம்முறையும் ஆதரவற்ற பிள்ளைகளை பராமரித்து வரும் இல்லங்களின் பிரதிநிதிகளிடம் பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டன.

வை.எம்.சி.ஏ அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

அவுஸ்ரேலியாவில் இருக்கின்ற தன்னார்வலர்கள், ஆதரவற்ற பிள்ளைகளின் பெயர் விபரங்களை பெற்றுக்கொண்டு அவர்களின் வயதடிப்படையில் அவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்களின் பெயரிட்டு பொதிசெய்து அனுப்புகிறார்கள்.

மன்னார் மாற்றுத்திறனாளிகள் இல்லம், முருங்கன் கிறிஸ்த்து அரசர் இல்லம், மன்னார் அன்னை இல்லம், மன்னார் வெற்றியின் நல் நம்பிக்கை இல்லம், மன்னார் கீரி அன்புச்சகோதரர் இல்லம், பேசாலை செபமாலை மரியன்னை இல்லம், பிரான்சிஸ்கன் அருட்சகோதரிகள் இல்லம் ஆகிய ஏழு இல்லங்களைச்சேர்ந்த 300 மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here