பீடி அடித்து விட்டு வாய் எரிவால் அவதிப்பட்ட பிரபல ஹீரோயின்!

கதாபாத்திரங்களுக்காக தங்களது தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் நடிகர்கள்போல் சில நடிகைகளும் அதில் மெனக்கெடத் தொடங்கி உள்ளனர். கமல், விக்ரம், சூர்யா போன்றவர்கள் கதாபாத்திரங்களுக்காக சிக்ஸ்பேக் வைப்பது, தோற்றத்தை குண்டாக்கிக்கொள்வது, ஒல்லியாக்குவது, கடுமையான மேக்அப் அணிவது போன்றவற்றிற்கு தங்களை உட்படுத்திக்கொள்கின்றனர். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக தனது உடல் எடையை 100 கிலோவுக்கு உயர்த்தினார் நடிகை அனுஷ்கா.

சமீபத்தில், ‘டாக்ஸி வாலா’ தெலுங்கு படமொன்றில் மது குடிக்கும் காட்சிக்காக நிஜமாகவே மது குடித்து நடித்தார் அப்பட ஹீரோயின் பிரியங்கா ஜவல்கர். அவரை தொடர்ந்து மற்றொரு நடிகை பீடி புகைக்க கற்றுக்கொண்டிருக்கிறார். கன்னட நடிகை நபா நடேஷ். இவர் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

கதாபாத்திரத்துக்காக பீடி பிடிக்க கற்றுக்கொண்ட அனுபவத்தை பகிர்ந்தார். அவர் கூறியதாவது: திரைப்படங்களில் நடிப்பதற்காக கடினமான உழைப்பை தருகிறேன். குதிரை ஏற்ற பயிற்சி பெற்று ஒரு படத்தில் நடித்தேன்.

இதையடுத்து மற்றொரு படத்தில் பீடி புகைக்கும் காட்சி இருந்தது. இக்காட்சியில் பீடி புகைப்பதுபோல் பாவனை செய்தால்போதும் என்று இயக்குனர் கூறினார். ஆனால் அந்த கதாபாத்திரம் பீடி புகைக்கும் குணம் கொண்டது என்பதால் அக்காட்சியில் நிஜமாகவே பீடி புகைத்து நடித்தேன். காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காகவே இப்படி செய்தேன். காட்சி முடிந்தபிறகு சில நாட்கள் வாய் முழுவதும் ஒரு எரிச்சல் இருந்துகொண்டே இருந்தது. அதை பொறுத்துக் கொண்டேன். காட்சி திருப்திகரமாக வந்ததற்காக சந்தோஷம் அடைந்தேன் என நபா நடேஷ் கூறினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here