இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் சர்வதேச போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானி 266 ஓட்டங்களை பெற்றுள்ளது.
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றது.
கடந்த போட்டியை போலவே, பின்வரிசை விக்கெட்டுக்களை இன்றும் மளமளவென ஆப்கான் இழந்தது.
ஒரு கட்டத்தில் 223/5 என இருந்த ஆப்கான், 266 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி 4 விக்கெட்டுக்களையும் 63 ஓட்டங்களுக்குள் இழந்தது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஹ்மத் ஷா 65 ஓட்டங்களையும், அஸ்மத்துல்லா ஒமர்சாய் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் பிரமோத் மதுஷன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை அணி 267 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகிறது. தற்போது 2.1 ஓர்களில் 17 ஓட்டங்களை பெற்று தொடக்க வீரர்கள் ஆடி வருகின்றனர்.