மாற்றுக் கருத்துகளும் மறுப்புக்களும் இருப்பதினால்தான் இந்த உலகம் வளமாக இருக்கின்றது!

செ.குணபாலன்

பல நாட்களில், பல சந்தர்ப்பங்களில் அதிகாரத்தோடும், ஆயுத பலங்களோடும் இருந்தவர்களுக்கு மாறாக சிந்தித்தித்தவர்கள், கருத்து கூறியவர்கள் தட்டிக்கப்பட்டார்கள், துரோகிகளாக அலங்கரிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு இருந்த அதிகாரத்தினை பயன்படுத்தி மாற்றுக் கருத்துடையவர்களின் கருத்துக்கள் அச்சேறுவதற்கு தடையும் விதித்திருந்தார்கள். தமக்கு இருந்த அதிகாரத்தினை பயன்படுத்தி மாறுபட்டு சிந்திக்க கூடியவர்களையும், கல்விமான்களையும் தூரோகிகளாகவும், தீண்டப்படதவர்களாகவும் மக்களிடத்தே காண்பித்திருந்தார்கள். இவர்களுடைய ஊடகங்களே இவர்களுக்கான ஊதுகுழல்களாக இருந்தமையால் மக்களிடையே மாறுபட்ட சிந்தனைகள் செல்வதற்கு வாய்புக்கள் இலலாது போயிற்று.

அண்மையில்- 21.நவம்பர்- அவுஸ்ரேலிய பிரதி உயர்தானிகர் Victoria Coakley அவர்கள் முன்னாள் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனை அவர்களை சந்தித்த போது அவர் கூறிய கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டியவையாகும்.

நாடாளுமன்றத்தின் மிகுதிக்காலம் இன்னமும் 2 வருடங்கள் இருகின்ற நிலமையில் அதுவரையில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ரணில் விக்கிரமசிங்க ஏன் ஒரு தேசிய கூட்டரசாங்கத்தினை ஏற்படுத்தி முக்கியமான விடயங்களுக்கு பரிகாரம் தேட முடியாது ஏன்று கேட்டிருந்தார். எவ்வாறு இது சாத்தியமாகும் என்று பிரதி உயர்தானிகர் கேட்டமைக்கு அவர் பதில் வழங்குகையில், ஜனாதிபதி சிறீசேனாவின் தலமையில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மஹிந்தவுடன் இணைந்து ஒரு கூட்டரசாங்கத்திற்கான உடன்படிக்கையினை கைச்சாத்திட்டு நாட்டின் முக்கிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்வரலாம் , இவர்கள் இருவரும் இணைந்து ஜனாதிபதியுடாக சிறையில் வாடும் கைதிகளை விடுவிக்கலாம், பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்கலாம், கானாமல் போனோர் அலுவலகத்தினை மேலும் பலம் வாய்ந்தாக மாற்றலாம், ஜெனீவாவில் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு சுமூகமான தீர்விக்கு வரலாம், தமிழ் மக்கள் பிரச்சனைய மூன்று தரப்பாரும் ( UNP, SLFP , தமிழ் தரப்பார்) பேசி தீர்க்கலாம், அதாவது புதிய அரசியல் யாப்பினை சமஷ்டி அடிப்படையில் முழுநாட்டிற்கும் ஏற்புடையதாக மாற்றலாம், அடுத்து எமது பொருளாதார நிலைமையினை சீர்ப்படுத்தும் முகமாக GSP மற்றும் வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டமை சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுத்து நாட்டின் ஸ்தீரதத்தன்மையினை நிச்சயப் படுத்தலாம், குறைந்து கொண்டு போகும் எமது ரூபாயின் மதிப்பினை நிட்சயப்படுத்தலாம். நாட்டின் கடன் சம்மந்தமாக இருவரினதும் ஒருமித்த கருத்தக்களினூடு அவற்ரை திரும்ப செலுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மேற்கண்டவாறு தமிழர் தரப்பு பிரட்சனை உட்பட, நாடு எதிர் கொண்டிருகும் பிரட்சனைக்கான மாற்று யோசனையை முன்வைத்து இருந்தார்.

எந்த ஒரு அரசியல் வாதிகளும், ஊடகவியாளர்களும் சிந்திக்காத கோணத்திலே அவரது சிந்தனை இருந்தது. நமது சமூகத்தில் பெரும் பகுதியினர் ஒரு விடத்தை அல்லது சம்பவத்தினை நோக்குகின்றவேளை ஏற்பு, மறுப்பு என்ற இரு கோணங்களில் மட்டுமே பார்க்கும் வகையில் பழக்கப்படடுள்ளார்கள். கறுப்பு வெள்ளையாக வகையாறு செய்வதினை வழக்கமாகமும் பழக்கமாகவும் கொண்டுள்ளார்கள். பல வர்ணங்களில் பல கோணங்களில் பிரட்சனைகளை பார்க்கும் பழக்கமோ, நடைமுறையினை அவர்கள் கொண்டிருப்பதில்லை. இவ்வகையான நடைமுறை ஒரு ஆரோக்கியமான சமுகத்தின் வளர்சிக்கு உந்துதலை ஏற்படுத்தபோவதில்லை.

சர்வதேச சமூகமானது எமது நாட்டின் மீதும் சனநாயகத்தின் மீது வைத்திருக்கும் அக்கறை (concern) என்பது அவர்களின் நலன்களையும் உள்ளடக்கியே இருக்கும் என்பது வெளிப்படையான தெளிவாகும். ஆனால் அவர்களை நாம் புறம் தள்ளிவிடமுடியாது. அவர்களூடாக நாம் எவ் வகையான தீர்வினை பெற்றுக்கொண்டாலும், அந்த தீர்வினூடாக நாம் ஒரு இணகத்தோடு செயற்படவேண்டியது இந்த இரண்டு பிரதான கட்சிகளோடு என்பதினை மறந்து விடக்கூடாது. இதனை கருத்தில் வைத்தெ விக்கினேஸ்வரன் அவர்கள் தனது மாற்று யோசனையினையில் கூட்டரசாங்கம் என்ற யோசனையை முன்வைத்து இருந்தார். அரசியல்வாதிகள் தமது நாடு மற்றும் மக்களின் நன்மையை கருத்தில் வைத்து தம்மையும் தாண்டி சென்று சட்ட நிபுனர்கள், கல்விமான்கள் , மாற்று சிந்தனையாளர்களின் கருத்துக்களை உள்வாங்கி பரிசீலிக்க வேண்டும். எமது அரசியல் வாதிகளுக்கு இருக்கும் நாம் என்ற ஆணவம் ( ego, arrogance) இதற்கு இடம் கொடுப்பது இல்லை.

ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் எமது பிரதிநிதிகள் தமது பதவிகளின் கண்களூடாகவே பிரச்சனைக்கான தீர்வுகளை பார்க்கின்றனர். கட்சிகளின் தலைமையில் இருப்பவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஒரு பிரச்சனைக்கான தீர்வினை தேடுகின்றபோது அவர்களின் பதவிகள் பிரச்சனைக்கான தீர்வுக்களை தடுக்கும் கதவுகளாக இருக்கின்றன. இதனை தாண்டி சென்று தன்னலம் இல்லாது தூய்மையாக சிந்தித்து தீர்வினை தேடுவதற்கு தலைவர்களுக்கு குறைந்த பட்சமாவது நாட்டுபற்று (patriotism) இருக்கவேண்டும்.

மாகாத்மா காந்தி, ஈவெரா பெரியார் போன்றவர்கள் வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாது மக்களின் நலன் சார்ந்த கருத்துக்களை மட்டுமே கொண்டிருந்தமையினால், அவர்களினால் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுக்கும் தைரியம் இருந்தது. எமது தலைவர்களில் பலர் இப்படியாக இல்¨லாமையினால் நாம் இன்னமும் ஈடாடும் இனமாக இருக்க வேண்டியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here